நண்பேன்டா
நணபேன்டா !
-------------
இளமையில் முதுமையில் இயல்பாய் முகிழ்த்திடும் /
வளமுடன் நெஞ்சினில் வளர்ந்திடும் உறவே !
எங்கோ பிறந்தார் எவ்விடம் வளர்ந்தார் /
இங்கே இதயங்கள் இரண்டும் சேருமே!
ஆயிரம் உறவிலும் ஆனந்தம் சேர்க்குமே /
பாயிரம் மகிழ்வோடு பாடிடும் சொந்தமே !
துன்பங்கள் இன்பங்கள் துயரங்கள் யாவினும் /
இன்முகம் மாறாது இணைந்திடும் துணையே !
வலசைப் பறவையாய் வாழ்வினில் பிரியினும் /
உலகினில் உயர்ந்தது உயரிய நட்பே !
-யாதுமறியான்.