என்னுயிர் தோழி

தயக்கமின்றி தண்டனைகள் கொடுக்கும்
சுட்டிப் பிள்ளையாக
பொறாமையே பொறாமை படும்
பொறாமைகாரியாக
பொழுதெல்லாம் உடன் கழிக்கும்
பொழுதுபோக்காளராக
பொங்கிடும் அன்பை கொட்டித்தீர்க்கும்
கொடையாளியாக
குறும்புகள் செய்து தினம் தினம் சிரிக்க
வைப்பவளாக
தோல்வி கண்டு துவண்டுகிடக்கையில்
தோழியாக
தோற்றத்திலே தோள் கொடுக்கும்
தன்னவளாக
எந்த இடத்திலும் எந்நேரமும் எனக்காக
இருப்பவள் என்னுயிர் தோழி மட்டுமே


உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (17-Mar-22, 7:06 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
Tanglish : ennuyir thozhi
பார்வை : 402

மேலே