தயவாய் மெட்டுக்கு பாட்டு

தயவாய் எமை இங்கு பாருமய்யா
மனக்குறை முழுவதும் கேளுமையா
பாழும் இவ்வுலகினில் பிறந்து விட்டேன்
பாவங்கள் பாடுகள் சுமந்து விட்டேன்
பாதைகள் மாறியே பரிதவித்தேன்
ஆசையால் அவதியுற்றேன் - பாவ
அடிமையாய் அலைந்து விட்டேன்.
-தயவாய்.

பாவத்தின் சம்பளம் மரணமென்றே
பாவங்கள் கூடும்போது உணர்ந்தேனே
ஊனக்கண் பார்வையால் உலகெங்கும்
உனைக்காண முடியாமல் தவித்தேனே
எனதன்பின் இறைவா....ஆ...ஆ...
எனதன்பின் இறைவா...
எனக்கிங்கு அருள் தா...
உனதண்டை வர ...வரம்தா
இருகரம் கூப்பியே
இரு விழி கலங்கையே
மண்டியிட்டு உன்னை பணிந்தேனே...
எந்தன் மனதினை நீர் அறிவீரே...
என்னை மன்னித்து ஏற்று கொள்வீரே.
-தயவாய்

ஆணவம் கூடியே அறிவிழந்தேன்
ஆண்டவன் உனையே மறுதலித்தேன்
அவணியில் எங்குமே அலைந்தேனே
ஆறுதல் கூறவே ஆளில்லையே
அருள்மிகு இறைவா ...ஆ ....ஆ ...
அடைக்கலம் தருவாய்
அரவணைதென்னையே காப்பாய்
தவறுகள் செய்த பின்
தடுமாறி நிற்கின்றேன்
கிருபையின் மகிமையினால்
என்னை மாற்றவே வேண்டுகிறேன்
எந்தன் ஸ்தோத்திரம் துதி உமக்கே.
- தயவாய்

(இது நான் மெட்டுக்கு எழுதிய இரண்டடைவது பாடல். தெய்வத்தின் அருளால் மனோ அவர்களால் பாடப்பெற்றது. யு டியூபில் காண https://youtu.be/55fXqilKqqU என்கிற லிங்கை உபயோகிக்கவும்.)

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (15-Mar-22, 10:13 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 29

மேலே