நதியாய் நாம்

மழைத் துளிகளாய் பிறந்து,
சிறு ஓடைகளாய் வளர்ந்து,
கொட்டு‌ம் அருவி போல விழுந்து,
காதலால்,
ஒன்றானோம் ஓர் நதியாய் !

வாழ்வெனும்
ஏற்ற இறக்கங்களில் தவழ்ந்து,
சமுத்திரத்தில் சங்கமிக்க !

பின் மீண்டும் பிறக்க,
மழையாக
இப்பூவுலகில் !

- நா முரளிதரன்

எழுதியவர் : நா முரளிதரன் (22-Mar-22, 4:01 pm)
சேர்த்தது : நா முரளிதரன்
Tanglish : nathiyaai naam
பார்வை : 199

மேலே