இப்படி வானங்கள்

மானிடர் நமக்கு ஓர் வானம்
அதுவே 'கீழ்வானம்; கடவுளர்க்கென்று
ஓர் வானம் அதுதான் 'மேல்வானம்;
அகக்கண்ணால் மட்டுமே அது வெளிச்சம்
கள்ளமற்ற முனிவர்கள் கண்களுக்கு
அது வெளிச்சம்
கீழ்வானம் வெள்ளென்று என்றாள் ஆண்டாள்
'மேல் வானம்' இருப்பது உணர்த்திடவே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-Mar-22, 1:50 pm)
பார்வை : 112

மேலே