குருவுக்கு சுக்கிரனுக்கு
காசினாலே எதையும் வாங்கலாம் என்று
கற்பிதலை உண்டாக்கி அதனையே
கவின்மிகு கருத்தாய் எங்கும் விதைத்த
காவிய மாந்தர்களாலே கெட்டது ஞாலம்
குருவுக்கு சுக்கிரனுக்கு செவ்வாயுக்கு
புதனுக்கு சனிக்கு திங்களுக்கு
ஞாயிறுக்கென ஒருநாளில் நேரமிருக்க
இராகு எமனுக்கான காலத்திற்கு அஞ்சுவதோ
உடைக்கு உறைவிடம் உணவுக்கு உறங்க
உழைப்புக்கு உகந்த வருவாய் என்றே
பல்வேறு நிலைகளில் இடர்கள் பிணைய
போதையை நுகர்வோர் புற்றுப் புண்ணே
அனலைக் கக்கியும் மலையை அழித்தும்
மணலை அள்ளியும் காட்டை வெட்டியும்
காசினை குவித்தே சூழலை பாழக்கினோம்
வாழ்வியலில் நமது தலைமுறையே நஞ்சு
ஏமாற்றுதல் பழிவாங்கல் துரோகம்
நயவஞ்சகம் பொறாமை பொருந்தக் காமம்
துன்புறுத்தல் இறங்காமை பிடிவாதம்
ஒத்துக்கொளல் இலகுதல் இவையே துன்பவழியாம்
--- நன்னாடன்.