கனவு🤔🤔

கனவு உலகில்
காற்றாட வந்து
கை பிடித்த
காளை அவன்!

கசங்காமல் அணைத்த
அவன் விரல்களின்
மந்திரத்தில் கட்டுண்ட
பெண்மையை போற்றும்
குணம் கொண்ட
குணாளன் அவன்!

குற்றுயிரும் குலையுயிருமாக
குறுக்கு எலும்பையுடைத்து
குடும்பம் நடத்த
எத்தனிக்கும் அற்பனல்ல!

அன்பிற்கனிந்து இணையும்
ஆருயிர் கனவான்
ஆற்றலின் சிகரம்
தொடும் காளையாயினும்
விழி மொழியில்
கசிந்துருகும் குணம்கொண்ட
கொங்கு தமிழனவன்!

கூப்பிடு தொலைவி
லிருந்தும் கூடிக்களிக்க
அளவற்ற ஆசையிருந்தும்
மேண்மையுடன் பெண்மை
மனங்கனிந்து விழிமூட
காத்திருக்கும் கட்டிளம்
காளைக்கு....

மனதினிலே கோவில்
அமைத்து முக்காலமும்
முழுமனதுடன் பூசை
செய்து வழிபட
தங்கத் தமிழச்சி
சங்கல்பம் செய்திடுமாறு
கனவு....

விழியிமைத் திறக்கும்
இளங்காலை வேளையில்
கனவின் மிச்சமாய்
விழியோரம் இருதுளி!!!

எழுதியவர் : கவி பாரதீ (25-Mar-22, 2:26 pm)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 109

மேலே