அலைதலே வாழ்க்கை
பிறந்த அடுத்த கணமே பாலுக்கு அலைகிறோம்
சில ஆண்டுகள் கழித்து பள்ளி சென்று படிக்க அலைகிறோம்
பள்ளி முடித்து கல்லூரியில் இடம் கிடைக்க அலைகிறோம்
கல்லூரி முடித்து வேலை கிடைக்க அலைகிறோம்
வாலிப காலத்தில் காதலிக்க அலைகிறோம்
கல்யாணம் செய்து தேனிலவு செல்ல அலைகிறோம்
கர்பமுற்றபோது டாக்டரிடம் அலைகிறோம்
குழந்தை பிறந்த பின் தடுப்பூசிகளுக்கு அலைகிறோம்
சில ஆண்டுகளில் நம் குழந்தையை பள்ளியில் சேர்க்க அலைகிறோம்
இப்படியாக வாழ்க்கை முழுவதும் அலைதலிலேயே நேரத்தை கடத்தினால் நாய் போல அலைய வேண்டியது தான்!