மனிதன? பிணமா?
நெஞ்சு பொருக்குதில்லையே
இந்த நிலை கெட்ட மாந்தரை
நினைக்கையில் - பாரதி சொன்னது.
இன்று அவன் இருந்திருந்தால்.
மாந்தர் வாழ்நிலை கண்டு,
தலை கவிழ்ந்து கொண்டு,
மீண்டும் ஒரு முறை மரித்திருப்பான்,
தானாக - ஐராவதம் தேடி.
வாழ்க்கையா வாழ்கிறோம் நாம்?
பிணங்களாக இருக்கிறோம்,
ஆனால்
உண்ணும் - உறங்கும்
எண்ணும் - எழுதும்
பிணங்களாக வாழ்கிறோம்.
நமக்கு உணர்வுகள்
மரித்தது என்று என தெரியுமா?
நம் உரிமைக்கு
பணம் வாங்கிய பொழுதும்,
நம் உரிமையை
பணம் கொடுத்து
பெற்ற போதும்.
மனிதனாக வாழ விருப்பமா?
பிணமாக வாழ விருப்பமா?
பிணம் என்றால் -
இன்று போல் என்றும் வாழ்க.
மனிதனாக என்றால் -
மாற்றம் கொள் -
உன் நடையில் -
நடத்தையில் -
நேர்மையில் -
கொள்கையில் -
நல்லவனாக - குறைந்தது
கெட்டவனாக
இல்லாமல் இரு.