பதில் வேண்டும்
பதில் வேண்டும்.
எல்லோர் மனதிலும்
இறைவன் என்பார்,
அவனே மனிதரின்
மனச்சாட்சி என்பார்.
அப்படியாயின்!
ஒருவன்
நல்லவனாகவும்,
இன்னோருவன்
கெட்டவனாகவும்
இருப்பது எதனாலே?
குழந்தையும்
தெய்வமும்
ஒன்றென்பார்.
அப்படியாயின்!
என்ன நடந்தது
நடு வழியில்!
"குழந்தை"
மனிதனாகும் போது!
ஆக்கம்
சண்டியூர் பாலன்.