இறந்த என் இதயம் -சங்கீதா
வேதனைகள் சுமக்கலாம்
தாய்ப்பால் போன்று
தூய்மையான ஒன்று
வேறு ஒன்றுமேமில்லை
இவ்வுலகில்....
நான் உன்மீது
கொண்ட காதலும்
அதுபோன்று தூய்மை
நிறைந்தது....
ஆனால்
உன் கள்ள தொடர்பால்
என் காதலே
எனக்கு விஷமானது...
ஒரு சொட்டு
விஷம் விட்டால் என்ன?
பல சொட்டு
விட்டால் என்ன?
பால் தூய்மை
கெட்டுதானே போகும்.
என் மனதில்
இன்று நீயும்
அப்படி தான்....
உயிரோடு
என்னை மண்ணில்
புதைத்து பிணமாக்கி
விட்டாயே?
என் மீது
உண்மையான காதல்
நீ கொண்டிருந்தால்
வேறு ஒருவளுடன்
உறவாட முடியுமா
உன்னால்?
இன்று
உன் நம்பிக்கை துரோகத்தால்
நிமிடம் ஒவ்வொன்றும்
வெறுப்பாக செல்கிறது....
கல் எரியப்படட
குளம் கலைவது
போலவே
வேண்டுமென்றே
உடைக்கப்படட கண்ணாடி போலவே
இன்று என் மனநிலை...
கலைந்தது, உடைத்தது என்றுமே
சரியாகி விடாது...
நீ தெரிந்தும்
உடைந்த என் இதயம்
உனக்கான துடிப்பை
நிறுத்தி விட்டது....
இறந்த இதயத்தில்
இனி என்றுமே நீ இல்லை என்பதை மட்டும் மறவாதே...
இந்த ஜென்ம
வாழ்க்கை உனக்கும்
எனக்குமானது என்றோ இறந்து
மண்ணில் புதைக்கப்பட்டது...
என் எதிரில்
மறந்தும் வந்து விடாதே...
வேதனைகள் சுமக்கும் என் இதயத்தை மீண்டும்
ஒருமுறை கொலை
செய்து விடாதே....
சங்கீதா
ஈரோடு