பிறனில் பிழைத்தான் எனப்பிறரால் பேசப் படுமேல் இழுக்காம் ஒருங்கே - அறநெறிச்சாரம் 89
நேரிசை வெண்பா
அறனும் அறனறிந்த செய்கையும் சான்றோர்
திறனுடையன் என்றுரைக்கும் தேசும் - பிறனில்
பிழைத்தான் எனப்பிறரால் பேசப் படுமேல்
இழுக்காம் ஒருங்கே யிவை 89
- அறநெறிச்சாரம்
பொருளுரை:
அயலான் மனைவியை விரும்பினான் என்று மற்றவர்களால் ஒருவன் பேசப்படுவனாயின், அவன் மேற்கொண்ட அறமும், அவ்வறத்தினுக்கேற்ற செய்கையும், பெரியோர் பலரும் நெறியுடையன் என்று சொல்லும் புகழும் ஆகிய இவை முழுவதும் கெட்டு பழிச்சொல்லுக்கு இடமாகும்.
குறிப்பு: இல் - மனையாள்