உதிரும் பூக்கள்
உதிரும் பூக்கள்
உதிர்ந்த பூக்கள்
சருகுகளாய்
பாதையில் கொட்டி
கிடக்கிறது
மலர்ந்த பூக்கள்
மரம் முழுவதும்
சிவந்த முகத்துடன்
வெட்கத்தில் நிற்கின்றன
இந்த சருகுகள்
தன் அழகின்
கீழே அருவருப்பாய்
கிடக்கிறதே
சுழன்று அடிக்கும்
சூறை காற்று
சருகுகளை வாரி
சுருட்டி பாதையின்
ஓரம் தள்ளிவிட
மலர்ந்த பூக்களோ
மனசுக்குள்
நன்றி சொன்னது
சூறை காற்றுக்கு..!
பாவம்
நாளை நமக்கும்
இதுதான் என்பது
தெரியாமல்