சுரேஷ் 08-ஏப்-202

கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும்
கவி பாடும்... சுரேஷ் பாக்கெட்
கைபேசியும் உதவி செய்யும்..

ஒரு மனிதனுக்கு மீனைக்
கொடுக்காதே... மீன்பிடிக்கக்
கற்றுக் கொடு... இது
சீனப் பழமொழி... மீனைக்
கொடுத்து மீன்பிடிக்கக்
கற்றுத் தருவது சுரேஷின்
வாழும் வழி...

அழகிய திட்டமிடல்...
ஆழ்ந்த ஒருங்கிணைப்பு...
உற்சாக உழைப்பில் தன்னை
உயர்த்திக் கொண்டே இருப்பதில்
சுரேஷிற்கு சுரேஷ் போட்டி...
இதை எப்போதும் சொல்வேன்
சுரேஷின் இயல்பைப் பாராட்டி..

சுரேஷ்... வாழ்க பல்லாண்டு
வளங்கள் எல்லாம் பெற்று...
வானம் வசப்படும்...
வசந்தங்கள் வரவேற்கும்...
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...
👍🌹💐👏🍫

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (8-Apr-22, 10:24 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 90

மேலே