அழகழகாய் பூக்குதே வானம்
அழகழகாய் பூக்குதே வானம்
அள்ளித் தெளிக்கிது சோலையில் பூக்களின் வாசம்;
அமுத கானம் பாடுது கானகத்து பறவையும்;
சுருதியும் லயமும் உருகி சுகமாய் சேரும் தருணம்;
ஜோடிக்கிளிகள் ஜாடை காட்டி ஒன்றாய் சேரும் தருணம்
காற்றில் மிதக்குது மேகம்;
காயப்படுத்து மோ! மோகம்;
விருந்து படைக்குது வானம்;
விளையாடி லயிக்குது இதமாய் இதயம்;
விடை பெற முடியாது துடிக்கிது மனதும்;
மாணிக்கப் பருதியும் விரைந்து சென்று, ஆர்ப்பரிக்கும் அலை கடலில் விழுந்திட துடிக்கும்;
பிந்தி பழுத்த வானம்;
பிடிவாதம் பிடித்தே ஓடும்;
அத்தனை கோலம்,
ஆனால்,
அந்த அந்திப் பொழுதை காணும்;
பின்னல்கள் போடுது பிந்திய வானம்;
பிந்தி வந்த நிலவும் பந்திவிரிக்கிது பாரும்;
வான வீதி எங்கும் நட்சத்திர பூக்கோலம்;
வந்தே சூழுது கார்முகிலும்;
மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்;
மினிக்கிக் காட்டுது மின்னலும்;
ஆடும் பெண்டீரின் கருங் கூந்தலைப் பார்த்து,
குலுங்கி, குலுங்கி, பொறுமி தவிக்கிது அந்த கார்முகிலும்;
பிடிவாதமாய் இடிக்கிது அந்த மழைமேகம்;
பொழிந்தே நனைக்குது வானம்;
தூவிய மழை நின்றும்,
துளிர்த்த இலையிலிருந்து சொட்டும் மழைத்துளிகளும்.
தெக்கத்திய காத்து தேடி வருது;
பொதிகை குளிர்பூந் தென்றலும்,
தாமரையின் மடல்களை அசைத்தே
தடாகத்து நீரை வருடும்;
அலை அலையாய் நீரை அசைத்தே இசைக்கும் தென்றலும் இதமாய் குளிரை பரப்பும்;
சுகமாய் காற்றை சுமந்து விளையாடுது தேகம்;
ஓடை ஓரத்து பூக்கள்,
ஒத்தையடிப்பாதையில் உதிர்ந்தே
ஒயிலாய் தீட்டுது ஓவியம்;
ஒட்டிய தேனை உறிஞ்ச படை எடுக்குது சிற்றெரும்பும்;
விருந்து படைக்கிது மோகம்,
விழுந்தே தவிக்கிது மனமும்
விடியலுக்கு தயாராகிறது இந்த அதிகாலை வானம்;
இரவைத் தாண்டி எழுந்து, வீதி எங்கும் ஒளியை பரப்ப, உதயமாக தவிக்கிது ஞாயிறும்,
விரித்த வண்ண மயில் தோகையாக,
விடியலும் வடிந்து கிடக்க துடிக்கும்.
அதிகாலையில் அன்பு வணக்கத்தை கூறும்
அன்பன் அ. முத்துவேழப்பன்