போராட்டம்
கண்கள் மூடி
காட்சிக்குச்
சிறை போட்டன!
செவிகளோ
சத்தத்துக்குத்
தடை போட்டன !
மனம்
எண்ண மறுக்க,
நல்ல
மணம் இருந்தும்
வாய்
உண்ண மறுத்தது !
கடைசிக் காற்றை
கொஞ்சம்
கடத்தி வைத்தது
நெஞ்சம் !
உடல் மொத்தமும்
மொத்தமாய்
ஸ்லிப் ஆகி
ஸ்லீப் மோடில்
ஸ்டிரைக் செய்தது !
இவை எல்லாம்,
எந்த நொடியிலே !
இடி இசைத்து
தூறல் தெளித்து
காற்றின் சாரல் வழி
மண்ணின் மணம் வீசி
வானவில் மாலை சூடிய
வெயில் கால மழை
நின்று போன நொடியிலே !
- நா முரளிதரன்