ஒத்தையடிப் பாதையிலே

ஒத்தையடிப் பாதையிலே/
யாருமில்லாத் தனிமையிலே/
பாதங்களோ புழுதியினிலே
தடம் பதித்திட/
விழிகளோ வழிகளின்
பசுமையை ரசித்திட/
கனமான மனதோ இதமாக மாறிட/
சிந்தனைச் சிறகுகளோ
புத்துணர்வோடு
சிறகடித்துப் பறந்திட/
உற்சாகம் உள்ளத்திலே
ஊற்றெடுத்து வழிந்தோட/
புன்னகைப் பூக்கள்
முகத்தினிலே மலர்ந்திட/
அந்திப் பொழுதின்
சிறு குளுமையிலே/
அழகாய் கழியுமே
ஒத்தையடிப் பாதையின்
அந்தி மாலைப் பொழுது/

இவள்
எண்ணங்களின் எழுத்தழகி
அறூபா அஹ்லா

எழுதியவர் : அறூபா அஹ்லா (21-Apr-22, 10:52 am)
சேர்த்தது : அறூபா அஹ்லா
பார்வை : 72

மேலே