வாழ்க்கை

இமைகள் இருப்பது திறப்பதற்கே,
பல வண்ணம் பார்த்து ரசிப்பதற்கே.

சுவைகள் இருப்பது ருசிப்பதற்கே
உண்டு, உண்டு மனம் களிப்பதற்கே.

ராகங்கள் இருப்பது கேட்பதற்கே
இன்ப இசைதனில் இதயம்
லயிப்பதற்கே

மன ஆசைகள் சிறகடிப்பது உயர,
உயர பறப்பதற்கே,
அந்த அழகான விண்ணை
அளப்பதற்கே.

திசைகள் இருப்பது அதன்
வழிதனை அறிவதற்கே
அதில் பாதைகள் பல தெரிவது
புரிந்து நடப்பதற்கே
ஆம்
இன்பமோ துன்பமோ
வெற்றியோ தோல்வியோ

இறைவன் நமக்களிந்த
இவ்வாழ்க்கை வாழ்வதற்கே!"

எழுதியவர் : (18-Apr-22, 10:15 am)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : vaazhkkai
பார்வை : 117

மேலே