மெளனத்தை மட்டும் பரிசாய் அளிக்காதே

நான் கேட்ட கேள்விக்கு
பதில் சொல்லாமல்
உடனே கிளம்பிவிட்டாய்....
கேட்டதால்
கோபமா
குழப்பமா
சம்மதமா
புரியாமல் தத்தளிக்கிறேன்.,

உன் மெளத்தால்
என்னை வதைக்காதே ...

புலனத்தில் புன்னகை பொம்மை அனுப்பி
புவனத்தில் என்னை வாழச் செய்..

பேஸ் புக்கில் engaged ஸ்ட்டஸ் மாற்றி
என் பேஸ் இல் புன்னகை பூக்கச் செய்...

கோபமானால்
வெறுப்பாக Status போட்டு
என் எண்ண அலைகளுக்கு முற்றுப்புள்ளி வை...

மர்மக் கதை யென நீளும் உன்
மெளனத்தை மட்டும் பரிசாய் அளிக்காதே....

எழுதியவர் : kaviraj (19-Apr-22, 9:05 pm)
சேர்த்தது : kaviraj
பார்வை : 155

மேலே