அவள் விழிகள்
இனிய காலைப்பொழுதில் வந்தாள் அவள்
இனிதே வந்து தந்தாள் எனக்கோர் தரிசனம்
கதிரவன் கதிர்ப் பட்டு அலர்ந்த கமலம்போல்
சுடர் விழிகள் திறந்தென்னை நோக்கினாள்
அவள் கண்களில் நான் காண்பதென்ன அவ்விநோதம்
ஓடும் நதியில் துள்ளி விளையாடும் இருகயல்போல்
இங்குமங்கும் ஓடி என்னை எடைப்போடும் கண்ணின்மணிகள்!
இவள் அங்க அசைவின் ஒவ்வொன்றிலும் காதல்
மொழி பேச இவள் கண்கள் நடனம் அல்லவோ புரிகின்றது