KAATHAL MOZHI PESUM UNAKKAAKA

மலர் மொட்டு
மௌனமாய் மெல்லத்
திறந்திட
தென்றல் வந்து
வருட இதழ் விரித்து
தேனிதழாள் நீ வந்து
முத்தமிட காத்திருக்குது
அந்திப் பொழுதினில்...

கலைந்தாடும் கூந்தலில்
காதல் மொழி பேசும்
உனக்காக நானும்.....

எழுதியவர் : கவின் சாரலன் (23-Apr-22, 4:47 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 43

மேலே