அணுவளவும் உன்னில் நினைவில்லையா 555

***அணுவளவும் உன்னில் நினைவில்லையா 555 ***
பாவையே...
என்னை
நான் மறந்துவிட்டேன்...
உன்னை மட்டும்
நினைக்க வைத்தது எப்படி...
நான் இழந்ததை எல்லாம்
மீண்டும் கிடைக்குமா...
கிடைத்தால் நான் கேட்பது
முதலில் என் இதயத்தைத்தான்...
அனலை மூட்டும்
உன் நினைவால்...
நெருப்பாய் கொதிக்கிறது
என் பூ உள்ளம்...
உன் நினைவுகளை
அசைபோட ஆரமித்தாலே...
இறுகிய என் நெஞ்சம்கூட
மலர ஆரமித்துவிடுகிறது...
உன் இதயம் என்ன
தாமரை இலையால் ஆனதோ...
நீர் ஒட்டாமல்
இருப்பது போல...
என் நினைவுகள்
ஓட்டாமலே இருக்கிறதே...
அணுஅணுவாய்
உன்னை ரசிக்கிறேன்...
என்னை அணுஅளவுகூடவா
நினைக்க மனமில்லை உனக்கு...
நினைவிருந்தால்
நேரில் வா நாளை.....
***முதல்பூ .பெ .மணி .....***