உன் முகம்காண ஏங்குகிறேன் 555

***உன் முகம்காண ஏங்குகிறேன் 555 ***
என்னுயிரே...
கடல்
அலைகள் இடைவிடாமல்...
உன் பாதங்களை
முத்தமிட வந்தாலும்...
நான் தடுத்துக்கொண்டே
இருக்கிறேன்...
உன்னை யாரும்
தொட்டுவிட கூடாதென்று...
உன்னிடம் சொல்லாத காதலும்
எழுதாத வார்த்தைகளும்...
எனக்குள் நிறம்பி
இருந்து என்ன பயன்...
வாசிக்கவும்
கேட்கவும் நீ இல்லை...
யாருக்காக நான்
இனி எழுத வேண்டும்...
உன்மீதான
என் கோபம்...
நான் உன்மீது
வைத்துள்ள பாசம்தான்...
உன்
முகம்காண ஏங்குகிறேன்...
கனவில் நான்
தனிமையில் சிரிக்கிறேன்...
உன்னை பார்த்தால் என்னை
நான் மறக்கிறேன்...
என் நிழல்
என்னைவிட்டு மறைந்தாலும்...
உன் நினைவுகள்
என்னைவிட்டு மறையாது...
நான் பூமியில்
இறக்கும்வரை...
உன்னை நேசிக்கும்
என் இதயத்தில்...
சில நொடிகள்
நீ வாழ்ந்துபார்...
என் காதலின்
ஆழம் புரியும் உனக்கு...
என் கண்மணியே.....
***முதல்பூ.பெ.மணி.....***