பிரமோஷன்

அறிவின் சாரம் குறைத்து,
மெல்ல
முதுகிற்கு பாரம் சேர்த்தது !

சொல்லிலே காரம் கூட்டி,
இல்ல
உறவிற்கு நேரம் குறைத்தது !

அமைதியை பேரம் பேசி
வெல்ல,
ஆணையிட வீரம் வீசியது !

பொறுப்பெனும் தாரம் வந்து,
உள்ள
விருப்பு வெறுப்புகளை தூரம் வீசியது !

பணமெனும் கோரம் வந்தது,
நல்ல
குணமோ சற்று ஓரம் சென்றது !

- நா முரளிதரன்

எழுதியவர் : நா முரளிதரன் (25-Apr-22, 10:29 pm)
சேர்த்தது : நா முரளிதரன்
பார்வை : 71

மேலே