என்ன சொல்ல ஆசையை..!!

இதயம் உன் அன்புக்காக
தான் இயங்கியது
கிடைத்ததும் சில கிருமிகள் யோசிக்கத் தோன்றியது..!!

அங்கு முழு அக்கு அக்காக
பிரித்து எடுத்து
சலவை செய்ய
துவங்கினேன் தூரிகையே..!!

பௌர்ணமியும் பொறாமைப்படும்
அளவிற்கு பேரழகு
உந்தன் முகம்
என் இதயத்தை கொள்ளையிட்டவளே..!!

உயிரூட்டும் உறுப்பிடம்
வன்மம் தோணவில்லை
என் வாரிசுக்கு வளர்ப்பு
ஊட்டு நீரோட்டம் அது..!!

ஆனால் சில நேரங்கள்
ஆசையின் ஆதிக்கம் செய்கிறது
காமன் என்னுள் புகுந்து
உன்னை காதலிக்கிறேன்..!!

காதலை ஓரம் தள்ளிவிட்டு
காமனுக்கு வழிவிட்டு
கண்ணியை களவாட
காத்து கிடக்கிறேன்..!!

ஈரம் கொண்டு நெஞ்சில்
இதயத்தை துடிக்க வைத்து
இவள் இடை ஓரம்
செல்ல அனுமதித்தது மனது..!!

உன் இடையை கூட
இடைவிடாமல் அணைத்து
கொள்ள வேண்டும்
இருக்கமாக..!!

இரண்டொரு நாழிகை
இடைவெளி விட்டால் கூட
என் இதயம் நின்றதாக நினைத்துக்கொள்..!!

எண்ணற்ற ஆசைகளை
உன் மீது திணிக்கவில்லை
தெளித்து விட்டேன்
தேவதையே நீ என்னவள்
என்ற நம்பிக்கையில்..!!

எழுதியவர் : (25-Apr-22, 2:55 pm)
பார்வை : 43

மேலே