அடி மனம்

அடி மனம்.

பகலில், அமைதியாக
அயர்ந்திருப்பாள்.

இரவில், என் தூக்கத்தை
கலைத்திடுவாள்.

அவளை நான்
அணைக்கச்
சென்றால்!
விலகி விலகி சென்றிடுவாள்.

பல முகங்கள்
எடுத்து வருவாள்,
பல வடிவில்
வந்து நிற்பாள்.

அவள் யார்?
என் ஆழ் மனத்து
ஆசைகளோ!

இதற்கு என்னிடம்
பதில் இல்லை!
இறைவனிடம்
சென்ற பின்!
கேட்பேன்
அவனை நான்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (26-Apr-22, 5:24 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : adi manam
பார்வை : 126

மேலே