காமம் வந்ததால்

கட்டளைக்கலிப்பா

காமம் வந்ததால் காதலுள் சிக்கியே
சூலை தந்ததால் பிள்ளையை பெற்றுமே
வாழ்க்கை தந்தது சோதனை ஓட்டமே
செல்வம் ஈட்டிட ஓடியே சிக்கினோம்
வாழ்வில் மாபெரும் நேரமும் தேய்ந்தது
எல்லா செல்வமும் பிள்ளையை ஏற்றிட
சென்றே மாண்டன பற்கலை கற்றனர்
துன்பம் தந்தனர் கெட்டதை செய்ததால் .
--- நன்னாடன்.

பா அமைப்பு முறை.

க) நான்கு சீர்கள் கொண்ட அரையடிகள் 8 வருதல் வேண்டும்

உ) அரையடி நேரசையில் தொடங்கினால், மெய்யொழித்து 11 எழுத்துக்களும், நிரையசையானால் 12 எழுத்துக்களும் கொண்டிருத்தல் வேண்டும்

ங) அரையடியில் முதல் இரண்டு சீர்க்களுக்கு இடையே ஆசிரியத்தளையும், பிற சீர்களுக்கு இடையே வெண்டளையும் வருதல் வேண்டும்

எழுதியவர் : நன்னாடன் (28-Apr-22, 8:55 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 110

மேலே