என் சுவாசம் உன் சுவாசமாக வேண்டும் நித்தம் 555

***என் சுவாசம் உன் சுவாசமாக வேண்டும் நித்தம் 555 ***


ப்ரியமானவளே...


நிழலாய் நீ என்னருகில்
இருக்க வேண்டும் நித்தம்...

புதிதாய் நான் பிறக்க வேண்டும்
உன் மடியில் நித்தம்...

காற்றாக நீ என்னில்
கலக்க வேண்டும்...

என் சுவாசம் உன்
சுவாசமாக வேண்டும் நித்தம்...

என் அறையெங்கும் உன் விழிகள்
விளக்காகக் வேண்டும் நித்தம்...

தேன் சுரந்த உன்
இதழ்கள் வேண்டும் நித்தம்...

நாம் சந்திக்கும் நாட்களில்
நான் நனைய வேண்டும்...

முத்த
மழையில் நித்தம்...

இமைக்கும் நொடியில்கூட
விழியோர
ம் வேண்டும் நித்தம்...

உன்னோடு வாழப்போகும்
அந்த அழகிய நொடிகள் எல்லாம்...

நிஜமாக
வேண்டும் நித்தம்...

உன் வாசலில்
போடும் மாக்கோலம்...

என் வாசல்
எங்கும் வேண்டும் நித்தம்...

ஆயிரம் மலர்களுக்கு
நடுவில் இருந்தாலும்...

என்னருகில் அங்கும்
நீ வேண்டும் நித்தம்...

உன் மேல்
எனக்கு காதல் பித்தம்...

நான் உயிர் வாழ வேண்டும்
உன் இம்சைகள் நித்தம் நித்தம்.....



***முதல்பூ .பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (29-Apr-22, 4:21 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 401

மேலே