முன்னின்று சொல்வாய் முதுமயிலே - கட்டளைக் கலித்துறை
கட்டளைக் கலித்துறை
பொழியும் நிலவினைப் போற்றிட நெஞ்சில்
..புளகிதமே;
விழியில் இருள்நீக்கு வேல்பார்வை ஏந்தி
..வியப்புடனே
மொழிகின்ற நீயாரோ முந்திவந் தேயென்றன்
..முன்வருவாய்;
மொழியத் தயக்கமோ முன்னின்று சொல்வாய்
..முதுமயிலே!
- வ.க.கன்னியப்பன்