மே தின வாழ்த்துகள்
மே தின வாழ்த்துகள்.
கரங்கள் இரண்டு
எமக்காய் உழைத்திடு மே!
கால்கள் மலைகளும்
ஏறி இறங்கிடு மே !
கண்களில் கருணை
என்றும் பொங்கிடு மே!
மண்ணின் வெற்றிகள்
எம்மில் தங்கிடு மே!
உழைப்பவர் கூலிகள்
என்பது மாறிடு மே !
உழைப்பவர் முதல்வர்கள்
எனும்நிலை தோன்றிடு மே!
அழைத்திடும் தோழர்கள்
கூக்குரல் கேட்டிடு மே !
உழைப்பின் செங்கொடி
உயரப் பறந்திடு மே !
மே தின வாழ்த்துகள்.
-யாதுமறியான்.