இமை மொழிவாயே

படிக்க வுன்னையு மிடலேனோ
படிக்க வுன்னிட முளதேதோ
நடிக்கு முன்னெழி லதுவேதோ
நடத்து தென்னிட மறியாயோ
அடிக்கு முன்னிமை மொழியாலே
அழைத்து சம்மத மிடுவாயே
குடிக்க வுன்னித லிளநீரே
கொடுக்க வெண்ணிடு இதழோடே!
*அறுசீர் வண்ணவிருத்தம்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (3-May-22, 4:32 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 202

மேலே