உங்களுக்காக ஒரு கடிதம் 16

அன்பு பெற்றோரே,
அடுத்த செக்மென்ட்டுக்கு வருவோம். அதாவது வாழ்க்கையில் உயர் மட்டத்தில் இருப்பவர்கள் VIPs .... Celebraties ....மந்திரிகள்....நடிகர்கள்...மருத்துவர்கள்....இது போன்றோர். இவர்களிடம் காசுக்கு பஞ்சமில்லை...புகழுக்கு பஞ்சமில்லை...ஆள் அம்பு சேனைகளுக்கு பஞ்சமில்லை.ஆனால் உண்மையான அன்புகாட்ட ஒருத்தர் கூட இல்லாத அனாதைகள். ஆம் எல்லாம் இருந்தும் அவர்களும் அனாதைகள்தான்...பாவம் அவர்கள் குழந்தைகளும் அனாதைகள்தான். வெறும் ஸ்டேட்டஸுக்காக வாழும் போலி வாழ்க்கை. ஸ்டேட்டஸுக்காக எதையும் செய்ய துணிந்தவர்கள்... எதையும் இழக்க தயங்காதவர்கள்...கசப்பான உண்மை இது. ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். ஏதாவது ஒரு காரணம்...ஏதாவது ஒரு சாக்கு உடனே ஒரு பார்ட்டிதான்...குடிதான். கும்மாளம்தான். தவிர்க்க முடியாத ஒன்றாய் போனது. பெண்களோ அவர்கள் அழகு...இளமை..ஆடம்பரம்... லேடீஸ் க்ளப் ...பேஷன் ஷோ...ஷோ ஆப் தான். கெத்துதான். குழந்தைகளின் நிலைமை? தான்தோன்றித் தனமாய் திரிவதும்...பிடிவாதம்...கோபம்...ஆத்திரம் ....அகங்காரம் கூடி... தடுமாறி....தடம் மாறித்தான் போகிறார்கள். பெத்தவர்கள் ஒருவர்....வளர்வதோ வாடகை தாயிடம்...வேலைக்காரர்களிடம்...ஹை ஸ்டேட்டஸ்...லோ ஸ்டேட்ஸிடம். சுற்றம் சூழ்நிலை ஹெல்தியாக இருந்தாலும்...அன் ஹெல்தியான வளர்ப்புமுறை. வேலைக்காரர்கள் இவர்களின் நெகடிவ்ஸ்களை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு குழந்தைகளின் வாழ்க்கையை அடகுவைத்து... அடக்கிவைத்து தங்கள் வாழ்க்கையை பாசிட்டிவாக ஆக்கிக்கொள்கிறார்கள். கசக்கிறதுதான்....ஆனால் உண்மைதானே. உலகத்தில் எத்தனை கேட்டபழக்கங்கள் இருக்கிறதோ அத்தனையையும் கைவந்த கலைகளாக்கி.... எத்தனை குறுக்கு வழிகளிருக்கிறதோ அத்தனையிலும் மாஸ்டர் ஆகி வெளுத்து வாங்குகிறார்கள். இப்படி இருக்க பெரியவர்களாகிய இவர்களின் அறிவுரையோ...வழிகாட்டுதலோ இளைய சமுதாயத்திற்கு எப்படி வழங்க முடியும்?
அப்படியே வழங்கினாலும் அவர்களிடம் இவைகளெல்லாம் எடுபடுமா? இந்த சமுதாயத்தை பிடித்துக்கொண்டு தன் கோரப்பிடியில் கசக்கிகொண்டிருக்கும் ஒரு ராட்சசன்...ஒரு கேன்சர்...ஒரு சிலந்தி வலை எப்படி வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளலாம். ஆனால் உடனே களைய வேண்டிய ஒன்று. இதன் அவசரம்...அத்யாவஸ்யம்...முக்கியவத்தை உணருவோம். அவசர நிலை பிரகடனப்படுத்தி அவசர கதியில் இதற்கு முக்கியமான ஒரு முடிவு எடுக்க வேண்டும். இலையென்றால் வரும் தலைமுறை எப்படி ஆகும் என்று சொல்ல முடியாது. மேடைபோட்டு எத்தனையோ பேசுகிறோம்...எத்தனையோ சட்ட திட்டங்கள்...கட்டுப்பாடுகள் யோசித்தாலும்.. போட்டுவைத்தாலும்..இது தனி நபர் சம்பந்தப்பட்ட ஒன்று...தனி குடும்பம் சம்மந்தப்பட்ட ஒன்று. தனி மனித ஒழுக்கம். அப்படி என்றால்?... என்னவாயிற்று?... எல்லாம் எங்கே போயிற்று? அதை பற்றி கொஞ்சம் யோசிப்போம். இது நாம் மட்டுமல்ல நம் சந்ததிகள் பற்றியது... சமுதாயத்தைப்பற்றியது.
போன 3 கடிதங்களிலும் நான் கூறியவை யாவும் எல்லா நிலையிலும்...எல்லா குடும்பத்திலும் நடக்கின்ற சாதாரணமான ஒரு நிகழ்வு. என்ன கொடுமையென்றால் அதன் சதவீதம்தான் கூடிக்கொண்டே போகிறது. அந்த பயத்தில்தான்...அந்த பாதிப்பில்தான் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.புரிந்து கொள்வோம். உடனே செயல்படுவோம். விபரீதங்கள் கூடிக்கொண்டே போகிறது. விழிமின்....எழுமின்...
தொடரும்.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (8-May-22, 11:08 am)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 59

மேலே