யாரடா மனிதன் இங்கே
பணம் இருந்தால் நல்ல மனிதன், இல்லாதவன் மிகவும் பொல்லாதவன்!
குணம் இருந்தால் வெறும் மனிதன், இல்லாவிட்டால் உயர்ந்த மனிதன்!
மனம் இருந்தால் ஒருவனுக்கு பைத்தியம், இல்லாவிடில் அதுவே நல்ல வைத்தியம்!
சினம் இருந்தால் கோபக்கார குருசாமி, இல்லாமல் போனால், இமயமலை சாமி!
படிப்பு இருப்பின் கெட்டிக்காரன், இல்லாமல் போனால், கடன்காரன்!
துடிப்பு இருந்தால் இளைஞன், இல்லாவிடில் கலைஞன்!
உணவை அதிகம் உண்டால் சாப்பாட்டுராமன், குறைவாக உண்டால் வடிகட்டிய கஞ்சன்!
உண்மையை எப்போதோ பேசினால் புத்திசாலி, எப்போதும் உண்மை பேசினால், அதிகப்பிரசங்கி!
திரையில் ஒருவளை கட்டிப் பிடித்தால், அது காதல், வெளியே லேசாக உரசினாலும், அது
அயோக்கியத்தனம்!
சிரிக்காமல் இருந்தால் சிடுமூஞ்சி, சிரித்த படியே இருந்தால், சாவுகிராக்கி!