முகம்பார்க்க காத்திருக்கிறேன்
நேரிசை வெண்பா
ஆக்கப் பணிவெற்றி காண அயல்தேசம்
ஊக்கமுடன் போன துயிர்காதல் -- நோக்கவே
காத்திருக்கு மென்னுயிரும் சாகா திருந்துயாம்
பாத்திருப்போ மிஃதையும் காண்
நான் ஏனின்னும் சாகாது உயிரைக் கையில் பிடித்துக் வைத்திருக்கிறேன் என்றால்
தூரதேசத்திற்கு ஊக்கமுடன் வெற்றிக்காக பயணம் சென்றுள்ள அவரின் வருகைக்கும்
அவர்முகம் பார்க்கவும் எதிர்நோக்கி காத்திருக்கிறேன்
காமத்துப்பால் 1263: பத்தொன்பது குறள்
.....