பேராசை
நித்தம் என்விழி
திறக்கும் இளங்காலை
பொழுதில், உன்மஞ்சள்
முகம்காண ஏங்கும்
எனக்கு தப்பாது
தரிசனம் தரும்
உன் கரிசனத்தில்
என்மனம் உருகுகின்றது
வாராஹி தாயே!!!
நீயின்றி நானில்லை யென்பது
நீ அறிந்த உண்மை...
என் செவி குளிர
நீ கூறகேட்க வேண்டும்...
நீயின்றி நானில்லை யென்று
மனம் இரங்குவாயா வாராஹி!!!