தானமா தந்தர்லா தோழா.....!!!



என் அன்பு தோழா...!!!
நம் உள்ளமும்.. மனதும்... நமக்கு
சொந்தமில்லை என்பது உண்மை எனில்
அதை சுமக்கும் உடல் மட்டும் எப்படி
நமக்கு சொந்தமாகும் ...?

உடல் கிழித்து உதிரம் சொட்ட எழுதிய
காதல் கடிதம் உண்மையில் காதலியை
இன்பம் கொள்ள செய்யுமோ..?

அதை தானமாய் கொடுத்து வந்தேன் என்று
சொல்லிப்பார்.. உன் காதலி உண்மையில்
உலுக்குள்ளே நெகிழ்ந்துபோவாள்..!! உன்
மனித பண்பை நினைத்து..!!

இதயத்தில் மற்றவருக்கு இடம் கொடுக்க
தெரிந்த நமக்கு..!!
இறந்தபின் இதயத்தையே தானமாய்
கொடுக்க இனியாவது மனம் வருமோ..?

உன் இதயத்தில் குடிகொள்ளவும்...சுமக்கவும்
இன்னும் எத்துணை சொந்தங்கள் காத்திருக்கிறதோ
உண்மையில்...!!

நாம் உலகை ரசிக்க உதவும் கண்கள்
கேட்டதில்லை கூலி..!!
ஆனால் நாமோ... இறந்தபின் அதற்க்கு
கொடுக்கும் பரிசு மண்ணில் புதைந்த
கரும் இருட்டோ...? என்ன நியாயம்..!!

நாம் இறந்தபின் நம் தாய் அழுதாலும்
எங்கோ நம் கண்கள் இந்த உலகை
மீண்டும் ரசிக்க தொடங்கட்டும்..!!

நமக்காய் இருந்து அதுவரை துடித்த இதயம்
எங்கோ மீண்டும் துடிக்க தொடங்கட்டும்..!!

எங்கோ ஒருவன் உயிர் காக்க
நம் குருதி அவனுள் மீண்டும்
உருண்டோடட்டும்...!!

நம் உடலும், கண்ணும், உதிரமும், இதயமும்
மண்ணோடு மண்ணாய் மக்கி போவதை
இந்த பூமி தாயும் ஏற்றுக்கொள்ளமாட்டாள்..!!
அந்த அக்னி தேவனும் ஒத்துக்கொள்ளமாட்டான்..!!

தானம் செய்வதில் தவறொன்றும்
இல்லை ..!!

நம் உடலோடு... நம் அறிவையும் தானமாய்
கொடித்திட வழி கேட்டு ஆண்டவனை
தொழுதால் என்ன தோழா..!!

எழுதியவர் : இன்பா (5-Oct-11, 8:19 pm)
பார்வை : 343

மேலே