பொறுப்பு
அவனுக்கு அவள் அழகு..
அவளுக்கு அவன் அழகு...
அவனுக்கு அவள் ரதி...
அவளுக்கு அவன் மன்மதன்...
அவனுக்கு அவள் ரவுடி பேபி...
அவளுக்கு அவன் டெடிபேர்...
இப்படிப்போகும் இன்றைய காதலில்..
பெற்றவர்க்கோ...
உற்றவர்க்கோ...
சொல்வதற்கு என்ன இருக்கிறது?
செய்வதற்குத்தான் என்ன இருக்கிறது?
அவரவர் வாழ்வுக்கு
அவரவர்தானே பொறுப்பு.