அன்பே உயிர்களின் ஆறுதல்
அன்பே உயிர்களின் ஆறுதல்..
-----------------------------
தேடும் விழிகள்
காணும் நாளில்
பாடும் மொழிகள்
நாடும் பாதம்!
ஓடும் வாழ்வில்
ஓய்வாய் வருவாய்
ஈடும் இணையும்
இல்லா உயிராய்!
சூடும் சுகமும்
எல்லாம் தருவாய்
வீடும் பேறும்
நீயே அருள்வாய் !
ஏடும் எழுத்தும்
யாவும் நீயே!
வாடும் உயிரின்
ஆறுதல் அன்பே !
-யாதுமறியான்.