உன் எண்ணமாகிய சமுத்திரம்

உலர்ந்திடும் வெற்று ஈர்ப்பு என்றென்னி
புறகணிக்கத்தான் செய்தேன்
மாறாக ஊற்றாய் உருவெடுத்து
பிரவாகமாய் பெருக்கெடுத்து
உன் நினைவாகிய. காட்டாற்று வெள்ளம் தன்
மையச் சுழலில்
சிக்கிய செரட்டையாய்
சிதறித்தான் போனேன்
அதன் தாக்கம் உணர்ந்த பொழுதில்

இன்னமும் திமிரி எழ முற்பட்ட
போது
மனமுவந்து முயற்சிதனை முற்றிலும்
கைவிட்டவளாய்
மூழ்கவே துடித்தேன்
உன் எண்ணமாகிய சமுத்திரத்தை
அடையும் ஆசைதனில்.

-Saishree.R

எழுதியவர் : Saishree. R (15-May-22, 10:59 pm)
சேர்த்தது : Saishree R
பார்வை : 117

மேலே