கண்களில் நிறைந்தவள்

கண்களில் நிறைந்தவள்.
-------''-----

வெண்திரையில் வீழுகின்ற பிம்பமென ,

விழித்திரையுள் வீழ்ந்துவிட்டாய் விதையாக !

உறுத்தாது முளைத்தாய் நீ கிளைத்தாய்

உத்திரமாய்க் கண்ணுக்குள் செழித்தாய் !

பார்ப்பதெலாம் நீயாகப் பரிணமித்து

பரிதவிப்பில் தவிக்கவிட்டுத் தலைகவிழ்வாய் !

தேர்ப்போகும் திசையெல்லாம் ஓடுகின்ற

சிறுபிள்ளை போலாகி மனதுமோடும் !

காலை வணக்கம் !
-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான் . (19-May-22, 10:35 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 335

மேலே