தலைமுறை இடைவெளி

📚📚📚📚📚📚📚📚📚📚📚

*தலைமுறை இடைவெளி*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

📚📚📚📚📚📚📚📚📚📚📚

ஆசிரியர்களுக்கும்
மாணவர்களுக்கும்
தலைமுறை இடைவெளி
பள்ளமாக அல்ல
பள்ளத்தாக்காகவே
விழுந்துள்ளது......

மாணவர்கள்
ஆசிரியர்களிடம்
ஒழுக்கம் தவறி
நடப்பதற்கான காரணத்தில்
ஒரு பக்கம் மட்டுமே
சொல்லப்படுகிறது
மறுபக்கம்
மறைக்கப்பட்டதா ?
மறுக்கப்பட்டதா ?

ஆசிரியர் நடத்தும்
பாடத்தை மட்டுமல்ல
ஆசிரியர்களின்
நடத்தையையும்
மாணவர்கள்
கவனிக்கிறார்கள் என்பதை
நாம் கவனிக்க
தவறி விட்டோம்......

அன்று
தமிழாசிரியர் என்றால்
வெள்ளை வேட்டி
வெள்ளைச் சட்டையில்
தமிழைப் போல்
கம்பீரமாக இருப்பார்கள்
தமிழ் ஆசிரியர் மீது
தனி மதிப்பு இருந்தது....
அதனால்தான்
வயதை கடந்து
தமிழ் ஐயா என்று
மதிப்புடன் அழைத்தனர்.....
இன்று
தமிழைப் போல்
தமிழாசிரியர்களும்
அடையாளத்தை
இழந்து உள்ளனர்.....!

மற்ற ஆசிரியர்கள்
ஆடம்பரமாக வருகின்றன
அநாகரீகமாக
நடந்து கொள்கின்றன

மாணவர்களை
செல்போன்
பயன்படுத்தக் கூடாது என்று
சொல்லும் ஆசிரியர்கள்
பாடம் நடத்தும்போது
அழைப்பு வந்தால்
பாடம் நடத்துவதையே
மறந்துவிட்டு
பேசிக்கொண்டுள்ளனர்...

நீங்கள் கெட்டு
போனதற்கு காரணம்
வாட்ஸ்அப்
பேஸ்புக் என்று சொல்லும்
ஆசிரியர்கள்
பள்ளியில்
அவர்கள் முன்னிலையில் அதைத்தான்
நோண்டிக் கொண்டு உள்ளனர்

தவறான வார்த்தைகளை
சொல்ல கூடாது என்று
சொல்லும் ஆசிரியர்கள்தான்
அதே
தவறான
வார்த்தைகளை கொண்டு மாணவர்களை
திட்டிக் கொண்டுள்ளனர்.....

நேரமானால்
வடை தேனீர் விருந்து
வகுப்பறையிலேயே
ஆடம்பரமாக
அரங்கேறுகிறது.....
இன்னும்
சில பள்ளிகளில்
ஓய்வறையை
சமையல் அறையாக மாற்றி
சம்மணம் போட்டு
சாப்பிடுகின்றனர்....

சரியான நேரத்திற்கு
வரவில்லை என்று
ஆசிரியர்களை
தலைமை ஆசிரியர்
கண்டிப்பதும்.....
சக ஆசிரியர்களோ
பொறாமை எண்ணத்தில்
சண்டை போட்டுக் கொள்வதும்
பெரும்பாலான பள்ளிகளில் சாதாரணமாக
நடக்கின்றன
ஒன்றாகிவிட்டது...

இதையெல்லாம்
பார்க்கும் மாணவர்களுக்கு
ஆசிரியர்கள் மீது
மதிப்பும் மரியாதையும்
எப்படி வரும்

இனியாவது......
ஆசிரியர்கள்
மாணவர்களுக்கு
புத்தகத்தை வைத்து
பாடம் நடத்துவதோடு
மட்டுமல்லாமல்
தாங்களே !
ஒரு நல்ல புத்தகமாக
இருக்க முயற்சி
செய்யுங்கள் ......

கடைசியாக ஒன்று
இதில் எல்லா
ஆசிரியர்களையும்
அடக்கவில்லை.......!


கவிதை ரசிகன் குமரேசன்

📚📚📚📚📚📚📚📚📚📚📚

எழுதியவர் : கவிதை ரசிகன் (20-May-22, 9:50 pm)
பார்வை : 55

சிறந்த கவிதைகள்

மேலே