✍️எழுதுகோல்

ஒருமுறையாவது
உன்னை தினமும் காண
கண்கள் காத்துகிடக்கிறது

பலமுறையாவது
உன்னை தினமும் உரசிட
கைகள் தவம்புரிகிறது

உன்னை மட்டும் அனுதினமும்
உபயோகம் செய்திட
மனம் ஏங்குகிறது

ஏனென்றால்

எந்தன் கவிதைகள் பிறக்கின்ற
எழுதுகோல் நீ என்பதால்
வாழ்வின் ஏக்கங்களும் அரிதாகிறது

உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (22-May-22, 7:51 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 231

மேலே