நீ இல்லா உலகம்

நீ இல்லா உலகம்...
------------------------------

சாலைகள் எல்லாம் வெறுமையாய்க் காட்சியளிக்கின்றன.!

சோலைகளும் காலியாய் ..
மேலே பறவைகளும் கீழே மனிதர்களும் மட்டுமே !

கடைகள் யாவுமே திறந்து கிடக்கின்றன ...
ஆங்காங்கே வாடிக்கையாளர் கொஞ்சமாய்!

நடைபாதைகளிலும் ....
நடப்போர்க் கூட்டமும் நாய்களுமே !

எல்லாமும் தலைகீழாக மாறிக் கிடக்கிறது ,...
உந்தன் பிரசன்னம்
ஒன்று மட்டும் இல்லாமையால் !

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான் . (25-May-22, 8:38 am)
சேர்த்தது : யாதுமறியான்
Tanglish : nee illaa ulakam
பார்வை : 177

மேலே