KAAVITH DUPATTAA KATRIL AADA

பேனாவை எடுத்தேன் தூய காலை
_வேளையில் காவிக்கு கவிதை பாட
மீனாவைப் பாடாமல் ஏனோ தானோ
_கவிதை ஏனோ முறைத்தது பேனா
மானாக மரகத சிலையாக மௌனமாக
_காவித்துப் பட்டா காற்றில் ஆட
தேனாய்ச் சிரிப்பவள் மீனா தானே
_பாராயோ நீயும் என்னினிய பேனாவே

__யாப்பில் எண்சீர் ஆசிரிய விருத்தம்
எனும் பாவினத்தைச் சேரும்

எழுதியவர் : KAVIN CHARALAN (25-May-22, 9:53 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 33

மேலே