அவளின் அழகு அதிகம்
நேரிசை வெண்பா
விழிநிறையென் காதலாள் மென்சிறு தோளால்
கழிமூங்கில் ஒத்த வனப்பாள் --- எழிலவள்
விஞ்சும் பிறன்மடந்தை எஞ்சும் அழகெலாம்
வஞ்சிச் சிறப்பு பகர்
கண்ணுக்கு நிறைந்த என் காதலி மெல்லிய மூங்கில்
போன்ற தோ ளினை உடையவள் மற்ற பெண்களை
காட்டிலும் கூடுதல் அழகுள்ள மங்கை. இஃதுண்மை
காமத்துப்பால். 2/ 20 வது பாடல்
...

