ANGEL ON THE EARTH POOLOKA THEVATHAI
பார்க்கும் இருவிழியால்
__பாலைவெளி பசுஞ்சோலை ஆகும்
ஆர்க்கும் கடல்முத்து
__பளிச்சிடும் பல்வரிசை ஆகும்
ஊர்வசியும் மேனகையும்
__தோழியாய் உன்பின்னே வருவர்
ஊர்கோலம் வந்த
__தேரெழில் பூலோக தேவதையே !

