விடியலில் தேவியின் காட்சி - எழுசீர் ஆசிரிய விருத்தம்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(புளிமாங்காய் மா விளம் மா / விளம் விளம் மா)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரலாம்)
(1, 5 சீர்களில் மோனை)
விரலால்நீ வீணை மீட்டினால் கீதம்;
..விசையினை வருடினால் ராகம்!
விரலால்நீ பேனா வினைத்தொடத் தாள்கள்
..விரித்திடும் காட்சியில் பாவம்!
விரலால்நீ இதழ்கள் தொட்டுச்,சி ரித்தால்
..விரவிடும் புன்னகை பாடல்!
விரலால்நீ போடு மார்கழிக் கோலம்;
..விடியலில் தேவியுன் காட்சி!
- வ.க.கன்னியப்பன்
கருத்தின் தூண்டுகோல்: திரு.கவின் சாரலன்