வெள்ளிலோத்திரம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

தாவரநஞ் சென்புருக்கி தாழா மகோதரநோய்
கூவவொட் டாத குரற்சாதம் - பூவுலகில்
வெல்ல(ம்)வரி தாய வியங்குமுதா வர்த்தமும்போம்
நல்லவெள்ளி லோத்திரத்தி னால்

- பதார்த்த குண சிந்தாமணி

தாவரநஞ்சு, என்புருக்கி, பெருவயிறு, குரற்கம்மல், வியங்கநோய், உதாவர்த்த நோய் இவற்றை வெள்ளி லோத்திரம் நீக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-May-22, 12:31 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

மேலே