பிசின்பட்டை - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
தசையிலுஞ் சோரி தனிலும் பரந்தே
வசிபோற்குத் திக்குடையும் வாய்வை - நிசமாகக்
கொல்லும் உடம்பின் கொதிப்பை ஒருநொடியில்
வெல்லும் பிசின்பட்டை விள்
- பதார்த்த குண சிந்தாமணி
தசை, மாமிசம் இவற்றால் குத்திக் குடைகின்ற வாயு, உடல் வெப்பம் இவற்றைப் பிசின்பட்டை போக்கும்