யார் நீ

நான் காணாத விடியலும் நீ.
நான் காண முயற்சி செய்த உதயம் நீ.
நான் சுவாசித்த காற்றும் நீ.
நான் தொலைத்த நொடிகளும் நீ.
நான் பயன்படுத்த தவறிய நேரங்கள் நீ.
நான் தண்ணீர் ஊற்றத் தவறிய பூச்செடிகள் நீ.
நான் நேசிக்க மறந்த நாட்கள் நீ.
நான் சுவைக்க மறந்த உணவு நீ.
நான் ரசிக்க மறந்த தருணம் நீ.
நான் எழுத மறந்த கவிதை நீ.
நான் பேச மறந்த வார்த்தை நீ.
நான் வாசிக்க மறந்த வாக்கியம் நீ.
நான் கேட்டு விரும்பிய பாடல் நீ.
நான் தொலைக்க விரும்பாத பொக்கிஷம் நீ.
நான் கண்டறியாத தேடல் நீ.
நான் தேடித் தொலையும் முற்றும் நீ.

என் ஆதியும் நீ,
என் அந்தமும் நீ.

எழுதியவர் : குட்டி புவன் (29-May-22, 8:35 pm)
சேர்த்தது : குட்டி புவன்
Tanglish : yaar nee
பார்வை : 125

மேலே